இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால். நாளைத் தொடங்கவுள்ள போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையில் மெல்போர்னில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒரு டி 20 போன்ற பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த தோல்வியால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் சிட்னியில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறங்கி ஆடுவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.