Publish Date: Tue, 24 Dec 2024 (14:06 IST)
Updated Date: Tue, 24 Dec 2024 (14:26 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன. மூன்றாவது போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.
இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோஹித் ஷர்மாவுக்கு இடது காலில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனால் அவர் மெல்போர்னில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ரோஹித் ஷர்மாவின் காயம் குணமாகியுள்ளதாகவும், அவர் மெல்போர்ன் டெஸ்ட்டில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.