பார்டர் கவாஸ்கர் தொடருக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது இந்திய அணி. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.
இதையடுத்து நான்காவது போட்டிக்காக இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் மெல்போர்ன் சென்று சேர்ந்தது. இந்நிலையில் விமான நிலையத்தில் கோலி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளொடு வரும் போது ஒரு பத்திரிக்கையாளர்களை வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதனால் கோபமான கோலி அந்த பத்திரிக்கையாளரிடம் நான் என் குழந்தைகள் மற்றும் மனைவியோடு இருக்கும்போது எங்கள் ப்ரைவஸியை மதிக்காமல் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்” எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அத்துடன் அவரின் செல்போனை வாங்கி அந்த வீடியொவை டெலிட் செய்ததாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இன்னொரு ஊடகவியலாளர் கோலியைத் தாக்கியுள்ளார். அதில் எங்கள் பத்திரிக்கையாளர் விமான நிலையத்தில் செய்தி சேகரிப்பிற்காக செல்பவர். பிரபலங்கள் வரும் போது அவர்கள் சம்மந்தமான செய்திகளைத் திரட்டி வழங்குபவர். நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். அதில் கோலி அந்தப் பெண்ணைத் திட்டியதைப் பார்க்கும்போது அவரைக் கொடுமைக்காரர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.