Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

vinoth
சனி, 31 மே 2025 (08:38 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.   அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். அவர் 9 நான்கு, சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹித் ஷர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பானப் பங்களிப்பைக் கொடுக்கவில்லை,. அதன் காரணமாகதான் அவரிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் பிறகும் அவரால் பேட்டிங்கில் அதிக பங்களிப்பைக் கொடுக்கமுடியவில்லை. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி இம்பேக்ட் ப்ளேயராகவே களத்தில் இறக்கி வருகிறது.

இந்நிலையில்தான் முக்கியமான போட்டியில் ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா. இந்த போட்டியில் அவர் நான்கு ரன்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்சர்கள் என்ற மைல்கல்லைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையைப்  படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 291 சிக்ஸர்களோடு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments