Publish Date: Wed, 03 Jan 2024 (09:35 IST)
Updated Date: Wed, 03 Jan 2024 (09:36 IST)
இந்திய அணி சார்பில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் சில வீரர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். ஆனால் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் அளவுக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னுடைய ஃபார்மை கண்டுபிடிக்கவில்லை. இதன் காரணமாக அவரின் பேட்டிங் ஆர்டரை மாற்ற இந்திய அணியில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அவரை ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் விளையாட வைக்க இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய கில் பின்னர் மூன்றாம் இடத்தில் விளையாடவைக்கப்பட்டார்.
அவரை தொடக்க வீரர் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு மாற்றியது குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா “கில் தன்னுடைய பேட்டிங் நிலைமைகளை சரியாக புரிந்து கொள்பவர். அவர்தான் மூன்றாம் இடத்தில் விளையாட ஆசைப்பட்டார். தொடக்க ஆட்டக்காரருக்கும் மூன்றாவது வீரருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில போட்டிகளில் நீங்கள் போட்டி ஆரம்பித்த உடனே ஆட வேண்டியிருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் மூன்றாவது இடத்தில் விளையாட பிடிக்காது. ஒன்று ஓப்பனிங் இறங்க வேண்டும். அல்லது காத்திருந்து ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்