Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்னாப்பிரிக்காவில் எங்கள் பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் சச்சின் மட்டும்தான்… மூத்த பவுலர் புகழாரம்!

தென்னாப்பிரிக்காவில் எங்கள் பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் சச்சின் மட்டும்தான்… மூத்த பவுலர் புகழாரம்!
, புதன், 3 ஜனவரி 2024 (07:30 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்ச்சூரியனில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதில் இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் (கோலி, ராகுல் தவிர) சொதப்பியதால் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இப்போது விளையாடும் அணியில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகமாக விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். ஆனால் அனுபவம் மிக்க வீரர்களும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் லெஜண்ட் பவுலர் ஆலன் டொனால்ட் இந்திய வீரர்களில் சச்சின் மட்டுமே தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பாக விளையாடியவர் எனக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் “எங்கள் மண்ணில் சச்சின் மட்டுமே சிறப்பாக விளையாடியவர். மிடில் ஸ்டம்ப்பில் நின்று பவுலர்களை தனக்கு வேண்டிய இடத்தில் பந்துவீச வைத்து விளையாடும் வல்லமை கொண்டவர். சரியான பந்துகளை மட்டுமே அடித்து ஆடுவார். மற்ற பந்துகளை விட்டுவிடுவார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடியோ மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹர்திக் பாண்ட்யா!