Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் தோனிக்கு கடைசி ஐபிஎல் போட்டியா? – ரோகித் சர்மா சொன்ன ரகசியம்!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (14:28 IST)
2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இது தோனியின் கடைசி போட்டியா என்பது குறித்து ரோகித் சர்மா கூறியுள்ளார்.

2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டி சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே போட்டிகளை அதன் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனுடன் தோனி விடைபெறுகிறாரா என்பது குறித்து கருத்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ”இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாடக் கூடிய அளவுக்கு தோனி வலுவாக இருக்கிறார்.இந்த வருட ஐபிஎல்தான் அவருக்கு கடைசி என சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இந்த சீசனில் சிஎஸ்கே கோப்பை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments