Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய உபி., வாரியர்ஸ்

மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய உபி., வாரியர்ஸ்
, சனி, 18 மார்ச் 2023 (19:37 IST)
இந்தியாவில் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு முதல் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை அணியை வீழ்த்தி, உபி., வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

மும்பையில்  உள்ள 2 மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், ஐந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இன்று மும்பை இந்தியன்ஸ்-  உபி., வாரியர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்தது.

டாஸ் வென்ற உபி., வாரியர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. எனவே மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியில் தொடக்க ஆட்ட வீராங்கனைகள் யாஸ்டிகா மற்றும் ஸ்கிவர் சொதப்பினாலும், அடுத்து வந்த மேத்யூத், ஹர்மன்பிரீத் சிறப்பாக விளையாடினர்.

எனவே, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. உபி வாரியஸ் அணி சார்பில், சோபி 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா, ராஜேஸ்வரி தலார் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி., வாரியர்ஸ் அணி  பேட்டிங் செய்தது.

இதில் தொடக்க வீராங்கனைகளாக தேவிகா, அலிசா ஆகிய இருவரும் சொற்ப் ரன்களில் அவுட்டாகினர். இதையடுத்து, மெக்ராத் 38 ரன்னும், கிரேஸ் 39 ரன்னும் அடித்தனர்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 வது பந்தில் சிக்சர் அடித்த வாங் அணி வெற்றி பெற உதவினார். எனவே, உபி., அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அடுத்த சுற்றுக்கு உபி., வாரியர்ஸ் முன்னேறியுள்ள நிலையில், இத்தொடரில் மும்பை அணி சந்தித்துள்ள முதல்தோல்வி இதுவாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஐபிஎல்-2023: உபி., வாரியர்ஸுக்கு 128 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்