கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு அனைவரையும் வாய்பிளக்கவைத்தார். இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் செய்ததுதான் மகா சொதப்பல். இந்த ஆண்டு நடந்த போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதன் காரணமாக லக்னோ அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ரிஷப் பண்ட்டுக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் “பண்ட் எதிர்மறையாக உணர்ந்தால், அது குறித்து ஆலோசிக்க நிறைய வீரர்கள் உள்ளார்கள். தோனி உங்களுக்கு ஒரு முன்மாதிரி. நீங்கள் உடனடியாக தோனியை அழைத்துப் பேசவேண்டும். சிறப்பாக விளையாடி ரன்கள் அடித்த பழையப் போட்டிகளைப் பார்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.