இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார்.
அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 99 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவரோடு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களோடு களத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் ஃபீல்ட் செய்தார். இரண்டாம் நாளில் பண்ட் மீண்டும் வந்து விக்கெட் கீப்பிங் செய்வாரா மற்றும் பேட் செய்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அப்படி நடக்காத பட்சத்தில் அது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.