Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

Advertiesment
Lords stadium india match

Prasanth K

, வியாழன், 10 ஜூலை 2025 (12:31 IST)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் தொடர் இன்று இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

 

5 போட்டிகள் கொண்ட இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் தொடரை வெல்ல முடியும் என்பதால் இன்று நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் முனைப்புடன் செயல்பட தயாராகி வருகின்றன.

 

இன்று டெஸ்ட் நடக்கப்போகும் லார்ட்ஸ் மைதானம் செண்டிமெண்டலாகவே இந்தியாவிற்கு ஒரு பேட் லக் மைதானம் என கிரிக்கெட் விமர்சகர்களால் வர்ணிக்கப்படுகிறது. ஏனென்றால் இதுவரை இந்தியா - இங்கிலாந்து அணிகள் 19 முறை லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இந்திய அணி அதில் 3 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.

 

இந்திய அணிக்கு வான்கடே மைதானம் எப்படி ராசியோ அதுபோல இங்கிலாந்து அணிக்கு லார்ட்ஸ் மைதானம். இந்தியாவிற்கு எதிராக 12 போட்டிகளை இங்கே வென்றுள்ளார்கள், 4 போட்டிகளை ட்ரா செய்துள்ளனர். ஆனாலும் கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டிற்குள்தான் இந்தியாவும் தனது வெற்றிகளை இதே மைதானத்தில் பதிவு செய்திருக்கிறது. எனவே யூக அடிப்படையில் கூட எதுவும் நடக்கும் சாத்தியக்கூறு உள்ள மைதானமாக இன்று லார்ட்ஸ் மைதானம் உள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!