Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த ஒரு இன்னிங்ஸ் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது… ரிங்கு சிங் நெகிழ்ச்சி!

Advertiesment
Rinku Singh biography
, புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:13 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளையும் சிக்சராக்கி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் ரிங்கு சிங் ஒரே இரவில் கிரிக்கெட் உலகம் முழுவதும் அறிந்த நபராகிவிட்டார். ஏனெனில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத சாதனை இது.

இதையடுத்து இப்போது அவர் இந்திய அணிக்காக டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இப்போது ரிங்கு சிங் இந்திய ரசிகர்கள் கொடுக்கும் அன்பைப் பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார். அதில் “குஜராத் அணிக்கு எதிரான என்னுடைய இன்னிங்ஸ் என் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அந்த தருணம் முதல் மக்கள் என் மேல் கொட்டும் அன்பு என்னை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணியில் இடம் கிடைக்காத சஹால்… டிவிட்டரில் ரியாக்‌ஷன்!