ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்ட போட்டியில் ஆவேஷ் கான் நடந்து கொண்டது முகம் சுழிக்க வைக்கும் விதமாக அமைந்தது. அந்த போட்டியில் திரில்லான வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் ஆக்ரோஷத்தின் உச்சிக்கு சென்று அவர் வெற்றியைக் கொண்டாடினார்.
அப்போது தன்னுடைய ஹெல்மெட்டை கழட்டி வீசி அவர் கோபமாக கத்தியது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. இதையடுத்து ஐபிஎல் நிர்வாகம் அவரின் செயலுக்காக அவரைக் கண்டித்து அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது தன்னுடைய அந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் ஆவேஷ் கான். இது சம்மந்தமாக பேசிய அவர் “எனக்கு அதன் பிறகு ரசிகர்களிடம் இருந்து நிறைய கேலி மெஸேஜ்கள் வந்தன. அதன் பிறகே நான் அப்படி செய்தது தவறு என்றுணர்ந்தேன். வெற்றிக்களிப்பில் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால் அவ்வாறு நடந்துகொண்டேன். ஆனால் அது தவறு என்று இப்போது வருத்தப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.