பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான்… ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

vinoth
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (14:17 IST)
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.

தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், பைக் சவாரி என மத்திய வயது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தன்னுடைய 43 ஆவது வயதிலும் ஆடிவரும் தோனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கடந்த சீசனில் ருத்துராஜ் பாதியிலேயே காயம் காரணமாக விலக, கேப்டன் பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார் தோனி.

இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள ஆஸி முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் “ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான். சிஎஸ்கே அணியில் தோனியின் பேச்சைதான் பயிற்சியாளர் கேட்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓய்வெல்லாம் அதுக்குப் பிறகுதான்… ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயற்சியாளர் உறுதி!

என் போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்- ரஹானே ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments