இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.
இதையடுத்து யுவ்ராஜ் சிங்கின் கேரியர் மிக விரைவாக முடிய, தோனிதான் காரணம் என்று யோக்ராஜ் சிங் கோபத்தைத் தொடர்ந்து வெளிபடுத்தி வருகிறார். அதே போல யுவ்ராஜுக்கு நெருக்கமானவராக அறியப்படும் கோலியையும் அவர் விமர்சித்து வருகிறார்.
தற்போது அவர் “இந்திய அணியில் சச்சினுக்கு இருந்த ஒரே நண்பர் சச்சின்தான். மற்றவர்கள் எல்லாம் யுவ்ராஜின் முதுகில் குத்தினர். தோனி, கோலி யாரும் நண்பர்கள் இல்லை. அவர்கள் எல்லாம் யுவ்ராஜைக் கண்டு பயந்தனர். அவர் கடவுள் உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்” எனக் கூறியுள்ளார்.