எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த ஆண்டாவது அந்த அணிக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லதீப் ஐபிஎல் குறித்து பேசும்போது “சென்னை அணியில் தோனி இருக்கும் வரை ஆர் சி பி அணியால் கோப்பையை வெல்ல முடியாது” எனப் பேசியுள்ளார். சென்னை அணியில் தோனி இருப்பதற்கும், ஆர் சி பி அணி கோப்பையை வெல்வதற்கும் என்ன சம்மந்தம்? இவர் என்ன கிரிக்கெட் பற்றி தெரியாத ரசிகர்கள் பேசுவது போல பேசுகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.