Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

Advertiesment
Death

Prasanth Karthick

, செவ்வாய், 2 ஜூலை 2024 (09:46 IST)
உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றியை நாடு முழுவதும் மக்கள் பலர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற நபரும் அவ்வாறாக பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளார். அப்போது பட்டாசு மீது டம்ப்ளரை மூடி வைத்து அவர் வெடித்துள்ளார். இதில் டம்ப்ளர் சிதறி அதன் துகள்கள் அருகில் நின்ற சிறுவனின் வயிற்றில் குத்தி கிழித்துள்ளன. உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடியபோது ஏற்பட்ட இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!