Publish Date: Mon, 26 Oct 2020 (20:06 IST)
Updated Date: Mon, 26 Oct 2020 (20:08 IST)
இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்து வரும் நிலையில் பஞ்சாப் அணி வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறது.
அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நிதிஷ் ரானா ரன் எடுக்காமலே அவுட் ஆனார். தொடர்ந்து இரண்டாவது ஓவரில் 4 வது பந்தில் ராகுல் ட்ரிபாதியும், 6வது பந்தில் தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆனார்கள். தற்போது நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கையாக இயான் மோர்கனும், பேட் கம்மின்ஸும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.