இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் நேற்றைய போட்டியில் கோலி டிவில்லியர்ஸ் பாட்னர்ஷிப் மிகவும் மெதுவாக விளையாடியதை கேலி செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த பெங்களூர் மற்றும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் பேட்டிங் செய்தவிதம் கோமாவில் இருப்பது போன்று இருந்தது எனக் கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக ‘ டி வில்லியரஸ் மற்றும் விராட் கோலி இருவரும் 7 ஆவது ஓவரில் இருந்து. 18 ஆவது ஓவர் வரை பேட் செய்தனர். அதைப் பார்க்கும் போது கோமாவில் உள்ளது போல் இருந்தது. இடையில் நான் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது அவர்கள் இருவரும் வித்தியாசமே இல்லாமல் விளையாடினர். ’ எனக் கூறியுள்ளார்.