Publish Date: Sun, 25 Oct 2020 (16:15 IST)
Updated Date: Sun, 25 Oct 2020 (14:44 IST)
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி இன்று விளையாட உள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து தோனி பேசியுள்ளார்.
இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தை அடைந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லாதது இதுவே முதல்முறை.
இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், பலரும் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக பதிவிட்டு ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள தோனி “தோல்வியிலும் துணை நிற்கும் இது போன்ற ரசிகர்களை பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிலர் காலம் முழுவதும் சிஎஸ்கே வென்று கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கு அதிர்ஷ்டமும் நமக்கு துணை நிற்க வேண்டும்” என கூறியுள்ளார்.