Publish Date: Sat, 16 Jul 2022 (17:32 IST)
Updated Date: Sat, 16 Jul 2022 (17:36 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டி மிகச்சிறந்த வீராங்கனையாகவும் பல கோடி ரசிகர்களைக் கவர்ந்தவருமான ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் - என்பவரை காதலித்து வந்த நிலையில் 2020 ஆண்டு இருவரும் திருமபம் செய்துகொண்டனர்.
ரஷியாவின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையும் மாடலுமான மரியா ஷரபோவா, கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சமீபத்தில், தன் 35 வது பிறந்த நாளை கொண்டாடிய ஷரரபோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கதிதில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், இரண்டு பேருக்கும் சேர்த்து நான் கேக் உண்கிறேன் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி ஷரபோவாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தியோடர் என்று பெயரிட்டுள்ளார். இதுபற்றறி அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, குழந்தை மற்றும் கணவரின் புகைப்பட்த்தையும் பதிவிட்டுள்ளளார்.
ஷரபோவா டென்னிஷ் தொடரில், 4 கிராண்ட்ஷலாம் கோப்பைகள் வென்று சாதித்துள்ளார்.