இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண கிரிக்கெட் உலகமே ஆவலாகக் காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.
இந்நிலையில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸை வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஷின் நக்வி “ இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தான் அணி வென்றே ஆகவேண்டும். இந்தியாவிடம் தோற்றால் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். போட்டிக்கு முன்பாக கிரிக்கெட் வாரியத் தலைவர் இப்படி பேசியிருப்பது பாகிஸ்தான் அணியினருக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கருத்துகள் எழுந்துள்ளன.