இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண கிரிக்கெட் உலகமே ஆவலாகக் காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.
இந்நிலையில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸை வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்திய அணி
ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்தர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்.
பாகிஸ்தான் அணி
இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (w/c), சல்மான் ஆகா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராஃப், அப்ரார் அகமது