இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறார் அபிஷேக் ஷர்மா. முதல் பந்தில் இருந்தே முதலே பவுண்டரிகளை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா. ஐபில் மூலம் கவனம் ஈர்த்த அபிஷேக் இந்திய அணியில் இடம்பிடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
இந்நிலையில் அபிஷேக் ஷர்மா பற்றி பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “இந்த மாதிரி இளம் வீரர்களால் நான் இன்றைய தலைமுறையில் பிறக்காததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதத்தை நான் பார்த்தேன். நான் அவரிடம் உங்கள் வேகத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள் என்று கூறினேன். அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.