Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

Advertiesment
Pat Cummins

Siva

, புதன், 8 அக்டோபர் 2025 (14:20 IST)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர், ஆண்டு முழுவதும் டி20 ஃபிரான்சைஸ் லீக்குகளில் விளையாட, தலா ரூ. 58.2 கோடி  என்ற மிக பெரிய தொகையை வழங்கிய ஐபிஎல் ஃபிரான்சைஸின் சலுகையை நிராகரித்துள்ளனர்.
 
இவர்களின் தற்போதைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒப்பந்த வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக இந்த சலுகை இருந்தது.
 
எனினும், இருவரும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் தங்களின் அர்ப்பணிப்பில் உறுதியாக இருந்து, அந்த சலுகையை நிராகரித்துள்ளனர்.
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் கம்மின்ஸ் ரூ. 18 கோடிக்கு ஏலம் போயுள்ளார். அதேபோல்  ஹெட் ரூ. 14 கோடிக்கு ஏலம் போன நிலையில் இருவரையும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி உலகளாவிய லீக்குகளில் விளையாட வைக்கவே இந்த சலுகை வழங்கப்பட்டது. ஆனால் இருவருமே இந்த ஆஃபரை நிராகரித்துவிட்டனர்.
 
இந்த நிலையில் வீரர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஷஸ் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகலா?... ஆஸி அணிக்குப் பின்னடைவு!