Publish Date: Tue, 18 Oct 2022 (10:24 IST)
Updated Date: Tue, 18 Oct 2022 (10:26 IST)
ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபகாலமாக அவர் பார்மில் இல்லாமல் ரன்கள் எடுக்க முடியாமல் சொதப்புவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு பதில் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் டி 20 போட்டிகளுக்கான கேப்டன் அறிவிக்கப்படவில்லை.