Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த பாகிஸ்தான்… இந்திய பவுலர்கள் அபார பவுலிங்!

vinoth
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (15:36 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன் படி பேட் செய்ய வந்த பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தையே ஆரம்பம் முதல் ஆடி வந்தது. பவர்ப்ளே ஓவர்களில் கூட பவுண்டரிகள் அடிக்க ஆர்வம் காட்டாமல் ஒன்று, இரண்டு என ரன்களை சேர்த்து வந்தனர்.

இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சற்று நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக்  ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அந்த அணி தற்போது மிகவும் நிதானமான ஆட்டத்தை ஆடி வருகிறது. தற்பொது களத்தில் கேப்டன் ரிஸ்வான் மற்றும் சவுத் சக்கீல் ஆகியோர் ஆடி வருகின்றனர். அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 58 ரன்கள் சேர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை வெற்றி பெறாவிட்டால் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பாக் வாரிய தலைவர்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த முடிவு… இந்திய அணியின் ஆடும் லெவன் என்ன?

இந்த தலைமுறையில் பிறக்காததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்திய வீரர் குறித்து பாராட்டு!

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

10 ஆண்டுகளாக நான் ஒரு நாளில் ஒருவேளை உணவுதான் எடுத்துக் கொள்கிறேன்… ஷமி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments