Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உம்ரான் மாலிக் சூறாவளி… குறுக்க வருவதை துவம்சம்…. ப சிதம்பரத்தின் வைரல் டிவீட்!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (09:12 IST)
ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார். நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதிலும் 4 விக்கெட்கள் க்ளீன் பவுல்ட்டாக அமைந்தன.

தற்போது ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் உம்ரான் மாலிக்கும் இருக்கிறார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அவரின் டிவீட்டில் “சூறாவளியாக பந்துவீசும் உம்ரான்   தனது பாதையில் குறுக்கிடும் அனைத்தையும் துவம்சம் செய்கிறார். ஐபிஎல் மூலம் கண்டெடுக்கப்பட்ட சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். அவருக்கு பிசிசிஐ போதிய பயிற்சி கொடுத்து இந்திய அணியில் விரைவில் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments