எகிப்தில் நடக்கும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கமும், ஹாங்காங்கில் நடக்கும் படகுப்போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளது.
எகிப்து நாட்டின் தலை நகர் கெய்ரோவில் பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
இப்போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீராங்கணை அஞ்சும் மோட்கில் கலந்து கொண்டார்.
50 மீட்டர் ரைபிள்3 பொஷிசன் பிரிவில் கலந்து கொண்ட அவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அதேபோல், ஹாங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பிரிவு படகுப்போட்டியில் லக்சய் , கவுரவ் குமார் தலைமையிலான இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.