ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து, 220 என்ற இலக்கை கொடுத்துள்ளது. இந்த இலக்கை ராஜஸ்தான் எட்டுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் பின் அபாரமாக விளையாடியது. வதேரா 70 ரன்கள் அடித்த நிலையில், சஷாங்க் சிங் 59 ரன்கள் அடித்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணியை பொறுத்த வரை, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் அது முதல் நான்கு இடங்களுக்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் அதே நேரத்தில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், முதல் அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.