சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் நேற்று அமெரிக்காவின் ராணுவ விமானத்தின் மூலம் கொண்டு வந்து விடப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் அமெரிக்கா செல்வதற்கு 60 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கிய வெளிநாட்டு நபர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் கட்டமாக 14 இந்தியர்கள் ராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கிய நிலையில், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்வதற்கு 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை ஏஜென்சிகளுக்கு கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா செல்வதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்போது திரும்பி உள்ளோம் என்றும், அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் உயிர் வாழ முடியும் என்றும் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இளைஞர்களிடம் பணம் வாங்கிய முகவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.