மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மோசமாக விளையாடி 4 போட்டிகளையும் இழந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் பலமிக்க அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் பல மாறுதல்களை மேற்கொண்டது. அதையடுத்து தற்போது இந்த சீசனில் ஆடிய நான்கு போட்டிகளையும் வரிசையாக தோற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. இந்த முறை மட்டுமல்ல எப்போதெல்லாம் மெஹா ஏலத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்கிறதோ அந்த சீசனில் எல்லாம் மோசமான் தொடக்கத்தையே மும்பை இந்தியன்ஸ் கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டில் முதல் நான்கு போட்டிகளை இழந்தது. இதுபோல 2014, 2015, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஏலத்துக்குப் பிறகு புதிய வீரர்களோடு களமிறங்கிய மோசமான தொடக்கத்தோடு விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளில் தோற்று 2015 ஆம் ஆண்டு இறுதியில் சாம்பியனானது.
இந்நிலையில் தங்கள் அணியின் இந்த மோசமான தோல்வி குறித்து அணியின் உரிமையாளர் நிதா அம்பானி கருத்து தெரிவித்துள்ளார். அதில் இது நமக்கு முதல் தடவை இல்லை. நாம் பலமுறை பலமோடு திரும்பி வந்துள்ளோம். அதனால் வீரர்கள் அனைவரும் தைரியமாக விளையாடி மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக் கூறியுள்ளார்.