Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

RCB தோல்வியை மாம்பழம் சாப்பிட்டு கொண்டாடிய நவீன் உல் ஹக்? – வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி!

Advertiesment
Kohli Naveen ul haq
, புதன், 10 மே 2023 (09:50 IST)
நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி போட்டியில் மும்பையிடம் ஆர்சிபி தோல்வியடைந்த நிலையில் இதுகுறித்து லக்னோ வீரர் நவீன் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி அணி போராடி 199 ரன்கள் சேர்த்தது. ஆனால் அடுத்த களமிறங்கிய மும்பை அணி சேஸிங்கில் தவிடுபொடி செய்தது. சூர்யக்குமார் யாதவ்வின் அதிரடி சரவெடியால் மும்பை அணி 16 ஓவர்களிலேயே இலக்கை நெருங்கி வெற்றி பெற்றது.

மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது. ஆனால் ஆர்சிபிக்கு இது பெரும் அடியாக மாறியுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ஆர்சிபி 16 புள்ளிகள் பெற முடியும்.

இந்நிலையில் நேற்று மும்பை – ஆர்சிபி போட்டியின் இறுதி கட்டத்தை மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டே பார்ப்பதை இன்ஸ்டாவில் ஸ்டோரியாக போட்டுள்ளார் லக்னோ அணிக்காக விளையாடும் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக். கடந்த ஆர்சிபி – லக்னோ அணி போட்டிகளின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

webdunia


இந்த மோதலில் நவீன் உல் ஹக் கோலி கைக்கொடுக்க வந்தபோது தட்டி விட்டதும், கம்பீருடன் சென்று கோலியிடம் எகிறிக் கொண்டு நின்றதும் அந்த சமயம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தனது செயலுக்கு நவீன் மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் ஆர்சிபி தோல்வியடைவதை மறைமுகமாக கொண்டாடும் வகையில் அவர் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீர் ஃபார்முக்கு வந்த டெல்லி..! சிஎஸ்கேவிடம் பாட்சா பலிக்குமா? – இன்று CSK vs DC மோதல்!