Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றினார் - விராட் கோலி

அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக  மாற்றினார் -   விராட் கோலி
, செவ்வாய், 9 மே 2023 (15:12 IST)
அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றினார் என்று  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோனிக்குப் பிறகு சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர் விராட் கோலி. ஆனால், ஒருநாள்  உலகக் கோப்பை மற்றும் ஒரு சில தொடர்களில் தொடர் தோல்விகளால் தன் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், ஐபிஎல் போட்டியில்  பெங்களூர் அணியின் வீரரராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்,  சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விராட் கோலி,தன் மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் அவரது மககள் வாமிகா பற்றிப் பேசினார்.

அதில், அனுஷ்கா என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒப்புகொள்வதற்கு வெட்கமில்லை. இப்படிக் கூறுவது என் வாழ்க்கைத்துணையைப் புகழ்வது கூட அது இல்லை.  அவர் என்னை மாற்றியுள்ளார் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் என் மனைவி மற்றும் மகள் வாமிகாவுடன் நான் இருக்கும் எந்த இடமும் எனக்கு வீடு என்று கூறியுள்ளார்.

விராட் கோலி இப்படி வெளிப்படையாக மனைவியைப் புகழ்ந்துள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி வரணும்னு எங்கள அவுட் ஆக சொல்றாங்க! – புலம்பி தள்ளிய ஜடேஜா!