இந்த சீசனின் தொடக்கத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் இந்த ஆண்டு அந்த அணி ப்ளே ஆஃப் செல்வதே சந்தேகமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாகப் போட்டிகளை வென்றுள்ளது.
இப்போது ஆர் சி பி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து நான்காவது அணியாக ப்ளே ஆஃப் செல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாய்ப்புள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நான்காவது அணியாக செல்லலாம். ஆனால் அந்த அணிக்கு போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த வெளிநாட்டு வீரர்களான ரிக் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ் மற்றும் கார்பின் போல் ஆகியோர் சொந்த நாடுகள் செல்லவுள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ, சரித் அசலங்கா மற்றும் ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.