இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலால் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரகாலம் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன.
ஐபிஎல் மீண்டும் தொடங்கியதும் நடக்க இருந்த ஆர் சி பி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாபும், அதையடுத்து டெல்லி மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்றன.
இதன் மூலம் குஜராத், பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.நான்காவது அணியாக ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு உள்ளது.