Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கேட்ச் புடிக்காத உனக்கு.. ஆட்டோகிராஃப் எதுக்கு?” தீபக் சஹாரை வெளுத்த தோனி! – வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (09:23 IST)
நேற்றைய ஐபிஎல் இறுதி போட்டிக்கு பின் தீபக் சஹாரிடம் தோனி கோவமாக பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.



நேற்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வென்று 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் இறுதி போட்டியில் ஜடேஜா அடித்த பவுண்டரி, தோனி பிடித்த கேட்ச், ஸ்டம்ப் அவுட் என பல வீடியோக்களும் ஷேர் ஆகி வருகின்றன.

அதில் போட்டி முடிந்த பிறகு தீபக் சஹாரிடம் தோனி கோவமாக பேசும் வீடியோவும் வைரலாகியுள்ளது. நேற்றைய போட்டியில் தீபக் சஹாரின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சு சுமாராகவே அமைந்தது. 3 ஓவர்களில் 31 ரன்களை கொடுத்த சஹார் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் விக்கெட்டை எடுக்க கிடைத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளையும் அவர் தவறவிட்டார். ஆனால் ஜடேஜா பந்து வீசியபோது 0.12 செகண்ட்ஸ் என்ற குறுகிய காலக்கட்டத்தில் கில்லை ஸ்டம்ப் அவுட் செய்து வெளியேற்றினார் தோனி.
இந்நிலையில் போட்டி முடிந்தபின் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்க தீபக் சஹார் வந்தார். ஆனால் அவருக்கு கையெழுத்து போட மாட்டேன் என செல்லமாக கோபித்துக் கொண்ட கேப்டன் தோனி அருகில் இருந்த ராஜிவ் சுக்லாவிடம், தீபக் சஹார் கேட்ச் பிடிக்காமல் விட்டதை கூறி கடிந்து கொள்கிறார். பின்னர் தீபக் சஹாருக்கு ஜெர்சியில் கையெழுத்து போட்டு கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments