நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் தோனி செய்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங் இறங்கியபோது மழை பெய்தது.
இதனால் போட்டிகள் தாமதமான நிலையில் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே அடித்து நொறுக்க தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டி 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.
இந்த ஐபிஎல் போட்டிதான் தனது கடைசி போட்டி எனவும், இறுதி போட்டிக்கு பின் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற போவதாகவும் அம்பத்தி ராயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால் இந்த வெற்றியை அவருக்கான Farewell மேட்ச்சாகவே சிஎஸ்கே கருதியது.
ஐபிஎல் ட்ராபியை பெற தோனி, ராயுடு, ஜடேஜா மூன்று பேரும் மேடையேறியபோது ராயுடுவின் கைகளால் ட்ராபியை வாங்க சொல்லி கேப்டன் தோனி அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டார். கேப்டனாக இருந்தாலும் ரிட்டயர்ட் ஆகும் ராயுடுவை கொண்டாடும் விதமாக அவரது கையில் ட்ராபியை பெற வைத்து அருகில் நின்று ரசித்த தோனியின் அந்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அந்த மனசுதான் சார் தல தோனி என பலரும் தோனியின் செயல் குறித்து மகிழ்ந்துள்ளனர்.