Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அங்கதான் பந்து வரும்.. கரெக்ட்டா நில்லு! – தோனி நடத்திய Wow Moments!

Jadeja
, புதன், 24 மே 2023 (11:12 IST)
நேற்றைய குவாலிஃபயர் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றதற்கு முக்கிய காரணம் தோனி என்பது ரசிகர்களின் கருத்து. அதற்கு ஏற்றார்போல் ஒவ்வொரு விக்கெட்டையும் திட்டமிட்டு வீழ்த்தினார் தோனி.

நேற்றைய ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற கேப்டன் தோனி செய்த ப்ளான்கள் சில

வ்ரித்திமான் சாஹாவின் விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி ஃபார்முக்கு திரும்பு நிலையில் இருந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்த அவரது பேட்டிங்கை கணித்த தோனி, அடுத்து ஆஃப் சைட்தான் அடிப்பார் என்பதை கணித்து, லெக் சைடில் நின்ற ஜடேஜாவை ஆஃப் சைடுக்கு மாற்றினார். அதை பார்த்தும் கூட ஆப் சைடில் அடித்து அவுட் ஆனார் ஹர்திக் பாண்ட்யா.

webdunia


அதுபோல 17வது ஓவரில் குஜராத் அணி வீரர் நல்கண்டே பேட்டிங்கின் போது மிஸ் ஃபீல்டு செய்ததால் சென்னை அணியின் அறிமுக வீரர் சுப்ரன்சு சேனாபதி பதற்றத்திற்கு உள்ளானார். அவரிடம் அமைதியாக இருக்குமாறும், நன்றாக மூச்சை இழுத்து விடுமாறும் சைகையில் காட்டி, விடு பாத்துக்கலாம் என்று நம்பிக்கை தந்தார் தோனி. அதன்பிறகு நல்கண்டே ஓடி ரன் தேற்ற முயன்றபோது சிறப்பாக செயல்பட்ட சேனாபதி பந்தை கரெக்டாக ஸ்டம்பில் வீசி நல்கண்டேவை ரன் அவுட் செய்தார்.

18வது ஓவரில் ரஷித் கான் விக்கெட்டை காலி செய்ய துஷார் தேஷ்பாண்டே லோவ் புல் டாஸ் போட்டால் ரஷித் கான் சிக்ஸ் தூக்க முயல்வார் என்பதை கணித்து சரியான இடத்தில் டெவான் கான்வேயை நிறுத்தி ரஷித் கானை அவுட் செய்தார் தோனி.

webdunia


பதிரானா தாமதமாக ஃபீல்டுக்குள் வந்ததால் பந்து வீசக்கூடாது என அம்பயர்கள் தடுத்தனர். பதிரானா 9 நிமிடங்களுக்கு ஃபீல்டிங் மட்டுமே செய்ய முடியும் பந்து வீச முடியாது என அம்பயர்கள் கூறினர். ஏற்கனவே 5 நிமிடங்கள் முடிந்திருந்த நிலையில் மீத 4 நிமிடங்களுக்கும் அம்பயர்களிடம் பேசி நேரத்தை கடத்தி விட்ட தோனி ட்ரிக்காக பதிரானாவை பந்து வீச வைத்தார்.

சென்னை அணி இந்த போட்டியில் எடுத்திருந்த ரன்கள் குஜராத் அணிக்கு குறைவுதான். ஆனால் திறமையான ஃபீல்டிங் மற்றும் கணிப்புகளை கொண்டு குஜராத் அணியை மடக்கி வெற்றியை சென்னை அணி கைப்பற்றியது. அதில் தோனியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போர் கண்ட சிங்கம்..! கதறி அழுத ‘தல’ தோனி! – ஹர்பஜன் சொன்ன உருக்கமான சம்பவம்!