Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா காவல்துறையில் DSP பொறுப்பு… சிராஜுக்குக் கிடைத்த கௌரவம்!

vinoth
சனி, 12 அக்டோபர் 2024 (07:20 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால்  டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெற்றார். அவர் இடம்பெற்ற இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போதே தெலங்கானா மாநில முதல்வர் அவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சையும் அவர் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தெலங்கானா மாநில காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இது ஒரு கௌரவ பொறுப்பாக அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிராஜ், தெலங்கானா மாநில அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments