Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!

Advertiesment
கோலி

vinoth

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (13:54 IST)
உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் கோலி, தொடர்ந்து பல வருடங்களாக விளம்பரப்படுத்தி வந்த நிறுவனங்களில் ஒன்று ‘பூமா’. இந்த நிறுவனத்தின் ஷூ மற்றும்  இன்னபிற பொருட்களை கோலி பிராண்ட் செய்து வந்தார். இந்த நிறுவனம் மூலம் அவர் 110 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளார். இந்நிலையில் இப்போது இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அவர் ரத்து செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ… சொந்த டீம் ப்ளேயர்களையே அவுட்டாகும் கோலி.. மோசமான சாதனை!