Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறை… தோனி படைக்கப் போகும் சாதனை!

Advertiesment
MS Dhoni Captain

vinoth

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (06:52 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் போட்டிகளில் தோற்று  புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இதனால் ரசிகர்களே சிஎஸ்கேவை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அன்கேப்ட் பிளேயர் ஒரு அணியை வழிநடத்தும் பெருமையைப் பெறுகிறார் தோனி. சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர் அன்கேப்ட் ப்ளேயராக இந்த தொடரில் அறிவிக்கப்பட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?