Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டும் லிட்டன் தாஸ்… 21 பந்துகளில் அரைசதம்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (15:57 IST)
பங்க்ளாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்.

நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வங்கதேச அணி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஆடிய இந்திய அணி கே எல் ராகுல், கோலி ஆகியோரின் சிறப்பான அரைசதம்  மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஷுக்கு இந்தியா ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இப்போது பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த உலகக்கோப்பை தொடரின் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதம் இது வாகும்.

பங்களாதேஷ் அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை சேர்த்துள்ளது. லிட்டன் தாஸ் 24 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு பயத்தைக் காட்டி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments