Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெதர்லாந்து வெற்றியால் தப்பித்த இந்தியா: ஜிம்பாவே பரிதாப தோல்வி

netherland vs zim
, புதன், 2 நவம்பர் 2022 (13:28 IST)
நெதர்லாந்து வெற்றியால் தப்பித்த இந்தியா: ஜிம்பாவே பரிதாப தோல்வி
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
இதனையடுத்து நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் வெற்றியை பதிவு செய்து இரண்டு புள்ளிகள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி வென்றிருந்தால் 5 புள்ளிகளுடன் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும். எனவே இந்தியா தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஜிம்பாப்வே அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த பேச்சுவார்த்தை!