Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

Advertiesment
RCB vs DC

Prasanth Karthick

, வியாழன், 10 ஏப்ரல் 2025 (14:49 IST)

RCB vs DC: நடப்பு ஐபிஎல் சீசனின் அதிரடியாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடக்க உள்ள இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

 

நடப்பு சீசனின் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி வென்று 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் அதே 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று இரு அணிகளில் குஜராத்தின் நெட் ரன் ரேட்டை தாண்டி வெற்றி பெறும் அணி புள்ளி வரிசையின் முதல் இடத்தை பெறும்.

 

தற்போது சீசன் நடந்துள்ள வரை வலுவான அணிகளாக தங்களை கட்டமைத்துக் கொண்டுள்ள அணிகளில் ஆர்சிபியும், டெல்லியும் சிறப்பாக உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரஜத் படிதார் போன்ற இளம் கேப்டனின் தலைமையில் புத்துணர்ச்சியோடு விளையாடி வருகின்றனர். விராட் கோல், பில் சால்ட், படிதார், படிக்கல் என தொடங்கி மிடில் ஆர்டர் தாண்டி ஜிதேஷ் சர்மா வரை பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளதால் பேட்டிங்கோ, சேஸிங்கோ ஒரு கை பார்த்து விடுவார்கள்.

 

முதலில் பந்துவீச சென்றாலும் யஷ் தயால், ஹெசில்வுட், புவி (புவனேஷ்வர்குமார்), க்ருணால் பாண்ட்யா (கடந்த ஆட்ட அதிரடி நாயகன்) என வலுவான பவுலிங் அணியும் உள்ளது.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் செம பார்மில் உள்ளது. 200+ ரன் ரேட் என்பது அவர்கள் அடித்து ஜெயிக்கக் கூடிய இலக்காகவே உள்ளது. அதுவும் சமீபத்தில் இம்பேக்ட் ப்ளேயராக புகுந்து விளாசிய அஷூதோஷ் சர்மா, போன மேட்ச்சில் மோசமான ரன் அவுட் ஆகியிருந்தாலும், பேட்டிங்கில் LSGக்கு எதிராக கலக்கினார். டூ ப்ளெசிஸ் வயதானாலும் இளைஞராக நின்றடித்து அரைசதம் விளாசுகிறார். மெக்கர்க், அபிஷெக் பொரல், ஸ்டப்ஸ், கே எல் ராகுல் என வலுவான கூட்டணியை அக்‌ஷர் படேல் சிறப்பாக கேப்பிட்டன்சி செய்கிறார். 

 

பவுலிங்கில் அசுரனான மிட்செல் ஸ்டார்க் இருப்பது டெல்லிக்கு சூப்பர் பலம். சன்ரைசர்ஸின் 5 விக்கெட்டுகளை தனி ஆளாக கழட்டி எடுத்து கடப்பாரை லைன் அப்பை காலி செய்தார். 

 

ஒரு அணிகளுமே அடித்து ஆடவும், அடித்து வீழ்த்தவுமான சமபலம் கொண்டவையாகவே காணப்படுகிறது. அதனால் இன்றைய போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என தாராளமாக எதிர்பார்க்கலாம். ஆனால் அதேசமயம் ஆரம்பமே ஒரு சிறு சறுக்கல் நடந்தாலும் மேட்ச் முழுவதும் ஒரு அணிக்கு சாதகமாக திரும்பும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!