Publish Date: Thu, 10 Apr 2025 (11:40 IST)
Updated Date: Thu, 10 Apr 2025 (11:52 IST)
உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் அவர் திடீரென தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்த விளம்பரப் பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார். அவற்றை அவர் ரீல்ஸ் பக்கங்களுக்கு மாற்றியுள்ளார். இதன் மூலம் அவரின் விளம்பர வீடியோக்கள் இனி ரீல்ஸ் பக்கத்தில் மட்டுமே வெளியாகும் என்றும், அவரின் இன்ஸ்டா பக்கம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பதிவுகளுக்காகப் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.