சர்வதேசக் கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கிங்’ கோலி… ரசிகர்கள் வாழ்த்து மழை!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:46 IST)
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். அந்த வகையில் இப்போது உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்து பல சாதனைகளைப் படைத்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிசிசிஐ உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார். அதன் பின்னர் அணியில் ஒரு வீரராக செயல்பட்டு வருகிறார். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார் கோலி.

இந்நிலையில் இன்று அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments