Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலியால்தான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது… ஒலிம்பிக் இயக்குனர் பகிர்ந்த தகவல்!

கோலியால்தான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது… ஒலிம்பிக் இயக்குனர் பகிர்ந்த தகவல்!

vinoth

, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:13 IST)
120 ஆண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு விளையாட்டுத் தொடர் என்றால் அது ஒலிம்பிக்தான். இந்த தொடரில் கிரிக்கெட் 1900 ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடந்தது. அதில் இங்கிலாந்து தங்கப் பதக்கம் வென்றது.

அதன் பிறகு ஒலிம்பிக்கில் இருந்து கிரிக்கெட் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம் ஒலிம்பிக்கில் ஒரு போட்டி விளையாடப்பட வேண்டும் என்றால் அது குறைந்தது 75 நாடுகளில் விளையாடப்பட வேண்டும். ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 10 நாடுகளில்தான் அது தீவிரமாக விளையாடப்பட்டு வந்தது.

ஆனால் டி 20 கிரிக்கெட் வரவுக்குப் பிறகு அமெரிக்காவில் கூட தற்போது கிரிக்கெட் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில்தான் அடுத்த ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்படுகிறது. டி 20 போட்டிகள் விளையாடப்படும் என சொல்லப்படுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி விராட் கோலியின் புகழ்தான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட காரணமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் சஸ்பெண்ட்.. 18 மாதங்கள் விளையாட தடை..!