நேற்று ஐபிஎல் சூப்பர் ஞாயிறில் நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணியை பெங்களூர் அணி வீழ்த்தி ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. இந்த போடியில் 73 ரன்கள் சேர்த்த விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதும் கோலி நடனமாடி, ஸ்ரேயாஸ் ஐயரை நோக்கி சில வார்த்தைகள் பேசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
கோலியின் இத்தகையக் கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பையும் ஆதரவையும் ஒரு சேரப் பெற்றுள்ளது. ஒரு சிலர் சீனியர் வீரரான கோலி, இவ்வளவு பொறுப்பற்ற தன்மையோடு நடந்துகொளக் கூடாது என்றும், அவர் இன்னும் பக்குவமாக நடந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் கோலிக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் கோலி ஆதரவாளர்களோ, சென்ற போட்டியில் பஞ்சாப் அணியிடம் பெங்களூர் தோற்றபோது அவர் கோலியை கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூரு ரசிகர்களை கேலி செய்தார். அதற்கெல்லாம் கோலி கொடுத்த பதிலடிதான் இந்த கொண்டாட்டம் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.