இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் டி 20 போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர்கள் இருவரும் டி 20 போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் கம்ரான் அக்மால் இதுபற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில் “கோலி, ரோஹித் ஷர்மா இருந்தாலே எதிரணிக்கு அழுத்தம் அதிகரிக்கும். அவர்கள் இல்லாமல் ஐசிசி கோப்பைகளில் இவர்களை போல சிறப்பாக அழுத்தங்களை கையாளும் வீரர்கள் இல்லை. கோலி இப்போதும் தனது பார்மின் உச்சத்தில் இருக்கிறார். இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர்களை டி 20 அணியில் எடுக்காமல் அணி நிர்வாகம் தவறு செய்துள்ளதாக நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.